இலங்கை பரீட்சைத் திணைக்களம் தனியார் மயமாக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் மதிப்பெண்களை கணினி மயமாக்குவது திணைக்களத்தின் உள் ஊழியர்களால் செய்யப்படும் என்றும்,
வேறு எந்த தனியார் நிறுவனமோ அல்லது வேறு நபர்களையோ இதில் ஈடுபடுத்தப் போவதில்லை என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரித்துள்ளார்.