ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசிகளையும் இயக்கங்களை மாற்றிக்கொண்டே இருக்கும்... இவ்வாறு மாறும் போது ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாயும், குருவும் ஒரே ராசியில் சேர உ ள்ளனர். இந்த சேர்க்கையினால் நவபஞ்ச யோகம் உருவாகின்றது.

குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள் | Navpancham Yog Guru Sevvai Guru Peyarchi Palangal

மே 1, 2024 அன்று மதியம் 1:50 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். கிரகங்களின் அதிபதியான செவ்வாய் ஜூலை 12-ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.  

ஆகையால் ஜூலை 12 -க்கு பிறகு ரிஷப ராசியில் குரு செவ்வாய் சேர்க்கையால் நவபஞ்சம் யோகம் உருவாகும்.  

இந்த கிரக சேர்க்கைகள் அசுப மற்றும் சுப பலன்களை அளிக்கும் நிலையில், இந்த யோகத்தினால் சில ராசிகளுக்கு அபரிமிதமான வெற்றிகள் கிடைக்கும்.

மேஷம்

மேஷ ராசியினைப் பொறுத்தவரையில் இரண்டாம் வீட்டில் இந்த நவபஞ்சம் யோகம் உருவாகுவதால், அதிர்ஷ்டமும், முழு ஆதரவும் கிடைக்கின்றது. 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவதுடன், இந்த காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தினைக் கொடுக்கும்.

குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள் | Navpancham Yog Guru Sevvai Guru Peyarchi Palangal

ரிஷபம்

ரிஷப ராசியில் முதல் வீட்டில் நவபஞ்சம மகாயோகம் உருவாகின்றது. வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பொருளாதார நிலைகளும் மேம்படுகின்றது. செலவுகள் சற்று அதிகமாக இருக்கும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும் காலம் இது என்பதால் துணிச்சலுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள் | Navpancham Yog Guru Sevvai Guru Peyarchi Palangal

சிம்மம்

சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைப்பதுடன், மகத்தான வெற்றியையும் காண்பீர்கள்.

தைரியமும் நம்பிக்கையும் அதிகரிப்பதுடன், பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும் நிலையில், நினைத்தது அனைத்தும் வெற்றியாகவே மாறும்.

குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள் | Navpancham Yog Guru Sevvai Guru Peyarchi Palangal