இறைச்சி வகைகளில் இல்லாத சத்துக்கள் கூட விலங்குகளின் ஈரலில காணப்படுகின்றது. இதை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மட்டன் ஈரலில் புரதம்,கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து,
துத்தநாகம், தாமிரம், செலினியம் , வைட்டமின் A, B, B6, B9m C, D, D3, கரோட்டினாய்டுகள் இப்படி ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
இதில் உடலில் நன்மை தரக்கூடிய பதார்த்தம் நிறைவுற்ற கொழுப்பாகும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதில், ஆட்டு ஈரல்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
இதனால், அனீமியா என்று சொல்லப்படும் ரத்த சோகை குறைபாடு நீங்குகிறது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளளவர்களும், உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்களும் வாரம் ஒருமுறையாவது இந்த ஈரலை சாப்பிடலாம்.
வயது முதிர்ந்த பருவத்தில் இதை சாப்பிட்டால் உடலின் என்பு பகுதி அடர்த்தியாகும். இதனால் மூட்டு வலி பிரச்சனைகள் வராது. உடலும் எப்போதும் ஆராக்கியமாக இருக்கும்.