பொதுவாகவே அனைவருக்கும் தன்னை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் முகத்தை பொலிவாக்க வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்கின்றனர்.
கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.
ஆனால் குறைந்த செலவில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு எந்த பக்கவிளைவுகளும் அற்ற பேஸ் பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தொன்று தொட்டு முகத்தை அழகுப்படுத்துவதில் கடலைமாவு முக்கிய இடம் வகிக்கின்றது. பொலிவிழந்த முகத்தை பொலிவாக்கவும் வறண்ட சருமத்துக்கு ஈரபதத்தை வழங்குவதிலும் முகத்தில் படிந்திருக்கும் அதிகப்படியாக எண்ணெய் பசையை நீக்குவதற்கும் கடலைமாவு உதவுகின்றது.
மேலும் எலுமிச்சை சாறு இறந்த சரும செல்களை வெளியேற்றுவதுடன் முகப்பரு பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்ககும்.
ஒரு ஸ்பூன் கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக தயாரித்து அதனை முதகத்தில் தடவி 15 நிமிடங்கின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறும்.
வாழைப்பழ பேக் சருமத்திற்கு மிகவும் நல்லது. வரண்ட சருமத்துக்கு ஈரப்பதத்ததை கொடுப்பதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து அதனை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினாால் முகம் உடனடியாக பொலிவு பெறும்.
வெள்ளரி மற்றும் தர்பூசணி பேக் கோடையில் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது. இது சருமத்தை உடனடியாக பொலிவவாக்குவதுடன் முகத்தைிற்கு குறிர்ச்சியையும் கொடுக்கும்.
இரண்டு ஸ்பூன் வெள்ளரி சாறு மற்றும் தர்பூசணி சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பின்னர் 1 ஸ்பூன் தயிர் மற்றும் பால் பவுடர் என்பவற்றுடன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவிட்டு கழுவினால் உடனடியான மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம்.
ஓட்ஸ் மற்றும் தக்காளி சாறு இயற்கையாகவே முகத்தை பொலிவாக்கக் கூடிய தன்மை கொண்டது.தக்காளி முகத்தை எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் சிவப்பழகாக்கும் தன்மை கொண்டது.
ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் உடனடியாக கொலிவு பெறும்.