பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டி பிரதேசத்தில் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (08) மாலை 6 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனின் தந்தை மற்றும் மற்றுமொரு யுவதி ஆகியோர் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தரம் இரண்டில் கல்வி கற்கும் கிஹான் மதுசங்க என்ற சிறுவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளான்.
முச்சக்கரவண்டி சாரதி அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி இன்று (09) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில முற்படுத்தப்படவுள்ளார்.