பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துவது போல், சில தெய்வங்களுடன் நேரடி தொடர்பை கொண்டிருப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் துர்கையின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் துர்கை அம்மனின் குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷபம் என்பது சைலபுத்ரி மற்றும் மகாகௌரியின் வாகனம் என இந்து மத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்த ராசியில் பிறந்தவர்கள் துர்கா தேவியின் விருப்பமான ராசிகளுள் ஒன்றாக அறியப்படுகின்றார்கள். இவர்களிடம் மனவலிமையும் தைரியமும் ஏனைய ராசியினரை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இவர்கள் பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பதோடு, எதற்கும் துணிந்தவர்களாகவும் துர்கையைபோல் நம்பினோரை காக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கடகம்
கடக ராசியை ஆளும் கிரகமான சந்திரன் துர்கா தேவியின் மூன்றாவது வடிவமான சந்திரகாந்தாவின் நெற்றியில் காணப்படுகின்றார். அதனால் இவர்களுக்கு துர்கையின் அருள் பிறவியிலேயே கிடைத்துவிடுகின்றது.
இவர்கள் எந்த கடினமான சூழ்நிலையிலும் சரியான முடிவுகளை எடுக்கக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும், பேச்சாற்றலால் பிரச்சினைகளை கட்டுக்குள் வைக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களிடம் காணப்படும் அரவணைக்கும் பண்பு துர்க்கையின் அருளால் கிடைக்கப்பட்டது. இவர்கள் தங்களின் கருணையாலும் அச்சமற்ற தன்மையாலும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கின்றார்கள்.
சிம்மம்
துர்கா தேவியின் வாகனமாக சிங்கத்தை ராசியின் சின்னமாகவே கொண்டிருக்கும் சிம்ம ராசியினர் துர்க்கையின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள்.
இவர்களிடம் யாருக்கும் அஞ்சாத தைரியமும் எதையும் சாமாளிக்கும் அறிவாற்றலும் மனவலிமையும் நிறைந்திருக்கும்.
இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் பயம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. இவர்கள் மற்றவர்களை காக்கும் துர்க்கை அம்மனின் வசீகர தோற்றத்தையும் மங்களகரமாக முகத்தையும் நிச்சயம் பெற்றிருப்பார்கள்.