மஸ்கெலியா, நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 100 ஊழியர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட 280 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.