உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் இடம்பெற்று வருகிறது. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பிரியங்கா வழங்கி வருகிறார்.
இம்முறை இடம் பெற்று வரும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பிரதீப் மற்றும் ஜோவிகாவும் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனால் படங்களில் ரொம்ப பிசியாக இருக்கும் மாயாவும் பூர்ணிமாவும் வந்துள்ளார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே தினேஷுக்கு விசித்ராவுக்கும் இடையே சண்டை சச்சரவாகக் காணப்பட்டது. விசித்திராவை விமர்சிப்பதையே முழு நேரமாக வைத்திருந்தார் தினேஷ். இது பார்வையாளர்களுக்கும் பிடிக்காமல் போனது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவருக்கும் இடையிலான பிரச்சினை தொடர்ந்தது.
இன்னொரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மாயா, பூர்ணிமா, விஷ்ணு விஜய் ஆகியோருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று இடம் பெற்ற பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மாயா, பூர்ணிமாக்கு வழங்கப்பட்ட விருதுகளை கலகலப்பாக அறிவித்துள்ளார் பிரியங்கா.
அதன்படி பூர்ணிமாவுக்கு 'தினமும் பொலம்பு காசு எடுத்துட்டு கிளம்பு' என்ற விருதும், அவர் ஒரு மாடர்ன் கேர்ள் என்பதால் அவருக்கு சிறிய பொம்மை மாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, 'மாயா வேட்டை இடிஞ்ச கோட்டை' என்ற விருது மாயாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.