பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக இருக்க காபி, டீயைக் குடிப்பதுண்டு. ஆனால் காபி, டீயை வெறும் வயிற்றில் குடிப்பது என்பது நல்லதல்ல.
மாறாக உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இயற்கை பானங்களை குடிப்பதே நல்லது. அதில் ஒன்று தான் ஆளிவிதை நீர்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் ஆளிவிதை நீரை குடித்தால் உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.
ஆளிவிதைகளில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, நார்ச்சத்து, புரோட்டீன், தயமின், காப்பர், மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ் செலினியம், ஜிங்க், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, ஃபேலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பெரூலிக் அமிலம், மாலிப்தீனம் மற்றும் பல சத்துக்கள் உள்ளன.
ஆளிவிதையில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று கோல்டன் நிற ஆளிவிதைகள் மற்றும் ப்ரௌன் நிற ஆளிவிதைகள்.
இவற்றில் ப்ரௌன் நிற ஆளிவிதைகள் கோல்டன் நிற ஆளிவிதைகள் விட நல்ல ப்ளேவருடன் இருக்கும்.
இந்த ஆளிவிதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். ஆனால் அதை ஊற வைத்து அதன் நீரைக் குடிக்கும் போது இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.
செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆளிவிதை ஊற வைத்த நீரைக் குடிப்பது நல்லது.
இது குடலில் உள்ள பிரச்சனைகளை போக்கும். ஆளிவிதைகள் மலமிளக்கியாக செயல்படுகிறது.
எனவே மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள் இந்த நீரை குடிக்கும் போது, உடனடி நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக இந்த நீர் வயிற்றுப்போக்கையும் சரிசெய்ய உதவுகிறது.
ஆளிவிதை நீரில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால் இது ஆரோக்கியமான தலைமுடியின் உற்பத்திற்கு உதவுகிறது.
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பி வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
இது ப்ரீ ராடிக்கல்களின் உருவாக்கத்தைக் குறைத்து, புதிய தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
ஆளிவிதைகளில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
எனவே இந்நீரைக் குடிக்கும் போது, அது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடு வெளிக்காட்டும்.
கூடுதலாக இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் முகப்பருவை உண்டாக்கும் ஆன்ட்ரோஜென் ஹார்மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.
உடல் பருமனைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையில் ஆளிவிதை நீர் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதற்கு ஆளிவிதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைக்கும் போது, அது நீரில் ஊறி வீக்கமடையும்.
இதை காலையில் உட்கொள்ளும் போது, அது மனநிறைவை அளித்து, வயிற்றை நிரப்பி, கண்ட உணவுகளை உண்ண வேண்மென்ற எண்ணத்தைத் தடுத்து, எடைஇழப்புக்கு உதவி புரியும்.