தற்போது டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லி பத்ரா மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். சனிக்கிழமை காலையில் அம்மருத்துவமனையின் செயல் இயக்குனர், இன்னும் சில சிலிண்டர்களிலேயே ஆக்சிஜன் இருப்பதாகவும், அரசு அனுப்பியுள்ள ஆக்சிஜன் டேங்கர்கள் சற்றே தொலைவில் இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 

இந்நிலையில் மதியம் 12.45 மணிக்கு ஆக்ஸிஜன் முற்றிலுமாக தீர்ந்து போக ஒரு மருத்துவர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் வார்டிலும் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் அம்மருத்துவமனையின் இரைப்பை குடலியல் துறையின் தலைமை மருத்துவர் ஆவார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இரண்டாவது விமானமும் டெல்லி வந்தடைந்தது.

அந்த விமானத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 7 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகளும் வந்ததாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.