இவ்வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளை கல்வியமைச்சர் இன்று வெளியிட்டுயுள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளது.

அத்துடன், ஒக்டோபர் 3 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.