பொதுத் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் தனது முடிவை வெளியிட்ட தினத்திலிருந்து 70 நாட்கள் தேர்தல் குறித்த நடவடிக்களை பூர்த்திசெய்வதற்கு அவசியம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு 70 நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசியம் என தேர்தல் ஆணையகத்தின் இயக்குநர் சமன் ரத்தினாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்தும் போது வாக்காளர்களையும் தேர்தல் பணியாளர்களையும் பாதுகாப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையகம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இது குறித்த மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் தேர்தலிற்கு மேலதிக பணியாளர்கள் தேவைப்படுவார்கள். சமூக விலக்கலை பின்பற்றுவதற்காக மேலதிக வளங்கள் தேவைப்படும்’ என தெரிவித்துள்ள அவர், தேர்தல் செலவு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.