அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பொருட்கள் அடிக்கடி மாயமாகியுள்ளன.

ஒரு நாள் நள்ளிரவு, வீட்டின் முன் யாரோ நடமாடுவதை தற்செயலாக கவனித்த Jenny Anchondo என்னும் அந்த தொகுப்பாளினியின் கணவர், மனைவியை எழுப்பியிருக்கிறார்.

இருவருமாக தங்கள் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த கமெரா காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள்.

அப்போது, நாய் ஒன்று வீட்டின் முன் டெலிவரி செய்யப்பட்டிருந்த பார்சல் ஒன்றைத் தூக்கிச் செல்வதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அப்படியானால், இவ்வளவு நாட்களும் தங்கள் வீட்டின் முன்னாலிருந்த பொருட்களை திருடிச்சென்றது திருடன் அல்ல ஒரு நாய் என தெரியவர, இருவருமாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த நாள், சற்று தொலைவில் உள்ள புல்வெளி ஒன்றில் அந்த பார்சலை கண்டுபிடித்துள்ளார் Jenny.

நல்ல வேளையாக, அதில் கொஞ்சம் மேக் அப் பொருட்கள், தேங்காய் எண்ணெய் முதலான பொருட்கள்தான் இருந்துள்ளன.

அத்துடன், அந்த நாய் கடித்து நாசம் செய்தது போக மீதமுள்ள பொருட்கள் பத்திரமாக இருந்துள்ளன.

அந்த நாய் யாருடையது என கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தாலும், இவ்வளவு நாட்களாக யார் அந்த திருடன் என மனதை குழப்பிக்கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது Jennyக்கும் கணவருக்கும்!