நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை நிரம்பியிருக்கின்றன.
உடல்சூட்டை தணிக்கக்கூடியது வெந்தயம். சிறுநீரையும் பெருக்கக்கூடியது. இதை தவிர வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. இவ்வளவு நன்மை தரும் வெந்தய நீரை குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
ஒரு நாள் முழுக்க வெந்தய நீரை குடித்து வந்தால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது டல் உட்பகுதியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, நெஞ்செரிச்சலின் தீவிரத்தை குறைத்து, இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது. இதனால் குடல் அழற்ச்சி வராமல் தடைபடுகிறது.
இதனால் நெஞ்சரிச்சல் கிட்டகூட வராது. இதுாபன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த நீரை அருந்தலாம். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது.
வெந்தய விதைகளில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கறைகளைப் போக்க உதவுகிறது.
எனவே கெமிக்கல்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு இதை பருகுவது நன்மை தரும். இப்போது வயது வித்தியாசம் இன்றி பரவலாக கணப்படும் ஒரு நோய் சக்கரை நோய்.
இந்நிலையானது உடலை இன்சுலின் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற கெமிக்கல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது.
மேலும் இவை உடல் சர்க்கரையை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதை மேம்படுத்துகிறது மற்றும் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த நீரை அருந்தலாம்.
இது உடலில் தேங்கி நிற்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்ற ஏகப்பட்ட நன்மைகள் இந்த வெந்தய நீரில் காணப்படுவதால் இதை தினமும் அருந்தி வந்தால் நல்லது.