பொதுவாகவே தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. இதற்கு முக்கிய காரணம் தங்கம் விலை உயர்ந்த உலோகம் மற்றும் முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றமையே அகும்.
தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாகரீகங்களும் சக்தி, அழகு, தூய்மை மற்றும் சாதனை ஆகியவற்றின் அடையாளமாக தங்கத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.
இது மட்டுமன்றி சாஸ்திரங்களின் அடிப்படையிலும் தங்கத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. ஜோதிட சாஸ்திர்தின் பிரகாரம் தலைமைததுவத்தையும் செழிப்பையும் வழங்கக்கூடிய கிரகங்களின் அதிபதியான சூரியபகவானுடன் தங்கத்துக்கு தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
இதுமட்டுமன்றி இந்து சாஸ்திரத்தின் அடிப்படைியில் தங்கம் மகாலட்சுமியின் மறுவடிவமானவே பார்க்கப்படுகின்றது. தங்கத்துக்கு இயல்பிலேயே நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி காணப்படுக்கின்றது.
தங்கத்தை ஒரு விலையுயர்ந்த உலோகம் என்பதால் பலரும் இதனை சேமிக்க நினைப்பதும் அணிந்துக்கொள்ள ஆசைப்படுவது இயல்பானது என்றாலும்,
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள்களுக்கு தங்கம் அணிவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்குமாம். அவை எந்தெந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள்.எனவே சூரிய பகவானின் ஆற்றலை பிரதிபலிக்கும் தங்கத்தை இவர்கள் அணித்துக்கொண்டால் இயல்பாகவே தன்னம்பிக்கை மற்றும் மனவலிமை அதிகரிக்கும்.
இந்த ராசியினர் தங்கத்திலான ஆபரணங்களை எப்போதும் அணிந்திருப்பது அவர்களின் சுயமரியாதை மற்றும் படைப்பாற்றலைத் அதிகரிக்க துணைப்புரிகின்றது. தங்கத்தை அணித்திருப்து இவர்களுக்கு மிகப்பெரும் பலமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச மற்றும் சுதந்திர உணர்வுக்க பெயர் பெற்றவர்களனாக இருப்பார்கள். இவர்கள் தங்கத்தை அணிந்துக்கொண்டால் இவர்களின் ஆற்றல் மேலும் அதிகரிக்கும்.
தங்கத்தின் ஆற்றல்மிக்க பண்புகள் தனுசு ராசியினருக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.
இவர்கள் தங்கத்தை அணிந்துபொண்டால் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிபபுடனும் குறைவில்லாத பணத்துடனும் வாழ முடிவதுடன் முன்னேற்றம் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.
இவர்கள் இயல்பிலேயே வசீகரமாக தோற்றம் மற்றும் காந்தம் போன்ற பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கத்தை அணிந்துக்கொள்வது இவர்களின் வசீகர தன்மையை மேலும் அதிகரிக்கின்றது.
தங்கத்தின் ஆற்றல்மிக்க பண்புகள், ரிஷப ராசியின் நடைமுறை மற்றும் லட்சிய இயல்புடன் இணைந்து அவர்கள் வாழ்க்கையில் செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.