சத்தீஷ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவருடன் ஆண் நண்பர் ஒருவரும் உடன் சென்றார்.


இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 9 வாலிபர்கள், சிறுமியையும், அவருடன் இருந்த ஆண் நண்பரையும் மிரட்டினர்.

சிறுமியை தவறான நோக்கத்துடன் ஆண் நண்பர் அழைத்து வந்ததாக கூறி அவரை அடித்து உதைத்து விரட்டினர். பின்னர் அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 9 பேர் கும்பல் கற்பழித்தது. பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த கொடூரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இவர்களில் சிலர் மைனர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.