அமெரிக்காவில் முதன்முறையாக தங்களது புதிய வீட்டின் தோட்டத்தில் விளையாடிய 3 வயது சிறுவன் அண்டை வீட்டாரின் நாய்களால் கடித்துக்குதறப்பட்டு மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. 3 வயதேயான அஜீஸ் அகமது அந்த காயங்களால் மரணமடைந்துள்ளான்.
சிறுவன் அஜீஸ் அகமதுவின் அலறல் சத்தம் கேட்டு, காப்பாற்ற விரைந்து சென்ற தாயாரையும் அந்த நாய்கள் பதம் பார்த்துள்ளது.
அவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். அஜீஸின் இன்னொரு சகோதரன், வெறி கொண்ட நாய்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக கூறப்படுகிறது.
புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்த நிலையில், அந்த குடும்பம் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
தமது பிஞ்சு மகனை அண்டை வீட்டாரின் 2 Pit Bull நாய்கள் கடித்துக்குதறுவதை கண்டு, தன்னால் முடிந்த அளவுக்கு அந்த தாயார் போராடியுள்ளார்.
பலத்த காயமடைந்த சிறுவன் அஜீஸ், பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், இரண்டு நாய்களையும் கருணைக்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.