நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 522 கொரோனா நோயாளர்களுள், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

அதன்படி 206 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களுள், பொரளையில் 36 பேரும் கொள்ளுப்பிட்டியில் 32 பேரும் நாரஹேன்பிட்டியில் 27 பேரும் தெமட்டகொடையில் 22 பேரும் மட்டக்குளியில் 15 பேரும் அடங்குகின்றனர்.

அத்தோடு, கிருலப்பனையில் 6 பேரும் மருதானையில் 4 பேரும் கொம்பனித்தெரு, ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ் முதலான பகுதிகளில் தலா 3 பேரும் புறக்கோட்டையில் 2 பேரும் பம்பலப்பிட்டி மற்றும் கருவாத்தோட்டம் முதலான பகுதிகளில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 81 பேரும் காலி மாவட்டத்தில் 28 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 27 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 24 பேரும் பதிவாகியுள்ளனர்.

மேலும் கேகாலை மாவட்டத்தில் 13 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 12 பேரும் கண்டி மாவட்டத்தில் 7 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 5 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.