நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் - நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த இரு தினங்களாக நிலவும் அதிக மழையுடனான சீரற்ற காலநிலையினாலும் அதிகரித்துள்ள காற்றின் வேகத்தினாலும் வட மாகாணத்தை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நயினாத்தீவிற்கு பிரவேசிக்கும் பாதை நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.