பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க கம்பனிகள் தயாராக இருப்பதாக முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகபேச்சாளர் ரொஸான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

ரதெல்ல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய நிலையில், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து இந்த துறையை நேர்த்தியா முன்னெடுத்து செல்லவேண்டும்.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு உடன்பட தொழிற்சங்கங்கள் முன்வரும் நிலையில் அதற்கு அமைவாக செயற்படுவதற்கு தயாராக உள்ளோம்.

இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியுமென ரொஸான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.