லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கானொலி காட்சி வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இதன்போது, எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

காஷ்மீர் மாநிலம், லடாக்கில் கல்வான் பகுதியில் இருந்து வெளியேறும் போது சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பிலும் பாதிப்பு உண்டு என்ற போதிலும் எத்தனை பேர் என்பதை அந்நாடு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 45 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலை தொடர்ந்து பதற்றத்தை குறைக்கும் வகையில், இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.