தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இன்று 2 ஆயிரத்தை தாண்டி 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 48 பேர் (தனியார் மருத்துவனை- 10) உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 576 ஆக அதிகரித்துள்ளது. 842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 27,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 25,463 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 24,621 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.