தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1974 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 1989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 30 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் இதுவரை இல்லாத அளவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். 1,138 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.   18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 1415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.