கொரோனா தொற்று பிரச்சினைக்கு தேசிய அளவிலான திட்டத்தை வகுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி  கொரோனா  வைரஸ் பேரிடரை எதிர் கொள்ள  தேசிய அளவிலான திட்டத்தை வகுக்கவும்,   அது குறித்து அறிவிப்பு வெளியிடவும்,  அதை நடைமுறைபடுத்தவும்  மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி  மேற்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது நல வழக்குகளுக்கான மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர்  பிரசாந்த் பூஷண் இந்த மனுவை  தாக்கல் செய்துள்ளார்.

மேலும் பி.எம்.கேர்ஸ்’ நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடைகளை,  தேசிய பேரிடர் நிதியத்துக்கு மாற்ற உத்தரவிடவும்,  இம்மனுவில் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.