தமிழக அமைச்சரவைக் கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக நாளை காலை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் புதிதாக பதவியேற்கும் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.