கோவை மாவட்டம் காரமடை வெள்ளியங்காடு அருகே உள்ள அன்சூரை சேர்ந்தவர் காளி (வயது 58). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளிக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரது மனைவி கவிதா (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

தர்மர் வேலைக்கு செல்லும் நேரத்தில் காளி அவரது வீட்டுக்கு சென்று கவிதாவுடன் ஜாலியாக இருந்து வந்தார். இது அக்கம் பக்கத்தினர் மூலமாக தர்மருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் காளியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்தார்.

ஆனால் இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத கவிதா, காளியை தனது வீட்டுக்கு அழைத்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்து வந்தார். நேற்று காலை தர்மர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். தனது கணவர் வெளியே சென்று விட்டதாக காளியிடம், கவிதா கூறினார். இதனையடுத்து மதியம் 1 மணியளவில் காளி, கவிதாவின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு 2 பேரும் ஜாலியாக உல்லாசமாக இருந்தனர். மாலை 4 மணியளவில் தர்மர் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். வீட்டிற்குள் தனது மனைவியுடன் காளி உல்லாசமாக இருப்பது கண்டு ஆத்திரம் அடைந்தார்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் காளியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து கவிதா அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் தனது கணவரிடம் இருந்து தப்பி வெளியே ஓட முயன்றார். அப்போது தர்மர் கவிதாவின் தலையிலும் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கினார். பின்னர் தர்மர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட காளியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியை கொலை செய்த தர்மரை கைது செய்தனர்.