ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். 

அந்தவகையில் கிரகங்களின் இளவளரசனான புதன் புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன் மற்றும் நல்ல தகவல்தொடர்பு திறன் போன்றவற்றை வழங்கும் ஆற்றல் கொண்ட கிரகமாகும்.

புதன் வக்ர பெயர்ச்சி: கடுமையான சோதனை இந்த ராசியினருக்கு தான் | Which Zodiac Sign Affected By Mercury Retrograde

ஏயைய கிரகங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக சிறிய கிரகமாகவும் வேகமாக நகரக்கூடிய ஆற்றல் கொண்ட கிரகமாகவும் பார்க்கப்படுகின்றது. 

எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி  மாலை 6:47 மணிக்கு புதன் தனது ராசியை மாற்றுப்போகின்றார். புதன் பிற்போக்கு நிலையில் கடக ராசிக்கு இடம்பெயர்வதால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வாழ்வில் சோதனை காலம் ஆரம்பிக்கப்போகின்றது.

 

அப்படி புதன் பிற்போக்கு பெயர்ச்சியால் பாதக விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

புதன் வக்ர பெயர்ச்சி: கடுமையான சோதனை இந்த ராசியினருக்கு தான் | Which Zodiac Sign Affected By Mercury Retrograde

மிதுன ராசியினருக்கு புதன் 1ஆம் வீட்டிற்கும் 4ஆம்  வீட்டிற்கும் அதிபதியாகி இப்போது பிற்போக்கு நிலையில் பேச்சு, குடும்பம் மற்றும் சம்பாத்தியம் என்ற 2ஆம்  வீட்டிற்குள் பிரவேசிக்கப்பேதகின்றார்.

 

அந்தர பெயர்ச்சி காரணமாக உங்கள் கருத்துக்களை நீங்கள் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதிகமாக கோபப்படுவீர்கள்.

புதிய வாய்ப்புக்களை பெருவதில் சிரமம் ஏற்படும்.எந்த காரியத்தை எடுத்தாலும் முடிப்பதற்கு மிகுந்த முயற்சி செய்ய வேண்டி ஏற்படலாம். இருப்பினும் தோல்வியை சந்திக்கும் வாய்ப்புக்களே அதிகமாக இருக்கும். நிதி நிலை சுமாராகவே இருக்கும். 

மேஷம்

புதன் வக்ர பெயர்ச்சி: கடுமையான சோதனை இந்த ராசியினருக்கு தான் | Which Zodiac Sign Affected By Mercury Retrograde

மேஷ ராசியினரை பொருத்தவரையில் புதன் 3ஆம் மற்றும் 6ஆம் வீடுகளில் அமர்ந்து 4வது வீட்டின் வழியாக செல்வதால் தொழில் ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். 

பணத்தை சேமிக்கவும் வருமானத்தை பெருக்கவும் எடுக்கும் சகல முயற்ச்சிகளும் தோல்வியில் முடியும். சாதரணமாக ஒரு வேலையை செய்ய நீக்கள் போடும் உழைப்பை விட இந்த காலகட்டத்தில் இரண்டு மடங்கு உழைப்பை வழங்க வேண்டியிருக்கும். 

 

சொத்துகள் மற்றும் வாகனம் போன்றவற்றை பவாங்குவதில் தடங்கள்கள் ஏற்படலாம். எனவே இந்த காலப்பகுதியில் புதிய முயற்ச்சிகளில் இறங்கும் முன்னர் தெளிவாக யோசித்து செய்ய வேண்டியது அவசியம். 

கடகம்

புதன் வக்ர பெயர்ச்சி: கடுமையான சோதனை இந்த ராசியினருக்கு தான் | Which Zodiac Sign Affected By Mercury Retrograde

கடக ராசியினருக்கு இந்த ராசி மாற்றம், மிகவும் பாதகமான பலன்களையே கொடுக்கப்போகின்றது.தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

ஆடம்பர பொருட்களை வாங்குவதில் நாட்டம் செலுத்தி நிதி பிரச்சினையில் சிக்கிக்கொள்வீர்கள்.நிதானமான செயல்பட வேண்டிய காலகட்டமாக இருக்கும்.