விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு நெருக்கமானவர் திடீரென மரணம் அடைந்து விட்டதாக வெளிவந்த செய்தியால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா நடிகர்கள் படப்பிடிப்பில் இருக்கும் போதும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் அவர்களுக்கு ரசிகர்களால் எந்தவித பிரச்சனையும் வராத வகையில் பாதுகாப்பு கொடுத்து அவர்களை பாதுகாப்பவர்களை பாடிகாட் என்று அழைப்பது உண்டு. அந்த வகையில் தாஸ் சேட்டன் என்பவர் விஜய், சூர்யா உள்பட பல பிரபல நடிகர்களுக்கு பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தார்.

விஜய் சூர்யா மட்டுமின்றி பவன் கல்யாண், மோகன்லால், மம்முட்டி உட்பட தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர், நடிகைகளுக்கு இவர்தான் பாதுகாப்பு பணியாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், நடிகைகளை நோக்கி எவ்வளவு பெரிய கூட்டம் வந்தாலும் இவர் அந்த நடிகர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவதில் வல்லவர் என்று கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில் பாதுகாப்பாளர் தாஸ் சேட்டன் மஞ்சள் காமாலை நோய்க்கு அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தாஸ் சேட்டனின் மறைவு விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

தாஸ் சேட்டனின் மறைவுக்கு பிரித்விராஜ், கீர்த்தி சுரேஷ் உள்பட பல நட்சத்திரங்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.