மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.
சில நேரங்களில் இந்த கனவுகள் நனவாகும். சில நேரங்களில் அவை நிறைவேறாது. ஆனால் அந்த கனவுகள் நிச்சயமாக எங்காவது நம் வாழ்க்கையுடன் தொடர்புபட்டிருக்கும் என்கின்றது கனவு பற்றிய அறிவியல்.
அந்த வகையில் உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் கனவில் நீங்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது சிரிப்பதையோ கண்டால், எதிர்காலத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள் என்று அர்த்தம். மேலும், வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது இதன் பொருள்.
உங்கள் கனவில் நீங்கள் அழுவதைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நீங்கள் அழுவதைப் பார்ப்பது ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு கனவில் அழுவதைக் கண்டால், வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெறப் போகின்றீர்கள் என்று அர்த்தம்.
கனவில் நீங்கள் அழுவதைப் பார்ப்பது என்பது வாழ்க்கையில் உங்கள் கஷ்டங்கள் குறையும் என்று அர்த்தம்.விரைவில் ஒரு நல்ல செய்தியைக் கேட்பீர்கள்.
உங்கள் கனவில் நீங்கள் இறந்து விட்டதாக கண்டால், நீங்கள் எதிர்காலத்தில் நீண்ட ஆயுளை வாழப் போகிறீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, உங்கள் சடலத்தை மயானத்திலோ, சடலத்தை ஊர்வலத்திலோ பார்த்தால், நீங்கள் வெற்றி பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.