சூப்பர் ரஜினியின் அரசியல் வருகை, அது குறித்து அவரின் முடிவு, அறிக்கை சமூகத்தில், ஊடக தளத்தில், வலைதளத்தில் மிகுந்த விவாத பொருளாகிறது.

அண்மையில் அவரின் அரசியல் வருகை உறுதி, பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன என மன்ற நிர்வாகி ஒருவர் கூறிய செய்தியின் எதிரொலியால் சூறாவளி அலை அரசியல் வட்டாரத்தில் பற்ற தொடங்கியது. அவரின் உடல் நிலை குறித்தும் தகவல் பரவியது.

இந்நிலையில் என் உடல் நலம் குறித்த தகவல் உண்மை தான். ஆனால் அரசியல் நிலைப்பாடு ரசிகர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் என டேக் போட்டு டிவிட்டரில் கொண்டாடியுள்ளனர். அவரின் மகள் சௌந்தர்யாவையும் டேக் செய்துள்ளனர்.

இதனால் அவர் தலைவரை விரும்புகிறோம், ஒருவர் மட்டுமே, எப்போதும் என்றும் என கூறியுள்ளார்.