பொதுவாக சிலர் காலையில் எழுந்து சந்தோசமாக குளித்து விட்டு, வீட்டிலுள்ள அனைத்து வாசணை திரவியங்களை பூசிக் கொண்டு வெளியில் செல்வார்கள்.

வெளியில் சென்று 30 நிமிடங்கள் கூட இருக்காது. வியர்வை வாடை வர ஆரம்பித்து விடும். நாம் காலையிலிருந்து செய்த அத்தனை காரியங்களை மண்ணோடு மண்ணாக மாற்றி விடுகிறது இந்த வியர்வை துர்நாற்றம்.

வியர்வை ஏற்படுத்தும் சுரப்பிகள் எக்ரைன், அபோக்ரைன் என அழைக்கப்படுகின்றன.

இதில், உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால்,நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்ரைன் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அக்குள்,நெஞ்சுப்பகுதி, பிறப்புறுப்பு பகுதியில் அபோக்ரைன் சுரப்பி சுரக்கிறது.

வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் 5 முக்கிய பொருட்கள்- பலன் நிச்சயம் | How To Get Rid Of Armpit Body Odour Home Remediesஇது பருவமடைந்தவர்கள் மட்டுமே ஏற்படும் ஆனால் துர்நாற்றம் ஏற்படாது. இவ்வாறு சுரக்கப்படும் வியர்வையில் கொழுப்பு, புரதங்களுடன் கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து தான் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இப்படியொரு பிரச்சினை இருக்கும் நபர் எவ்வளவு தான் வாசணை திரவியங்கள் போட்டாலும் வியர்வை சரியாகாது.

ஆகவே வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வதால் மாத்திரமே கட்டுபடுத்த முடியும். அந்த வகையில், துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

1. தினமும் இரண்டு முறை உங்கள் உடம்பை சரிவர கழுவுங்கள். பின்னர் அக்குள் பகுதிகளில் தண்ணீர் தேங்கியில்லாமல் நன்றாக உலர்த்திய பின்னர் ஆடைகளை அணியுங்கள். இப்படி செய்வதால் அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் 5 முக்கிய பொருட்கள்- பலன் நிச்சயம் | How To Get Rid Of Armpit Body Odour Home Remedies

2. குளிப்பதற்கு முன்னர் குளிக்க வைத்திருக்கும் தண்ணீரில் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து வைத்து விட்டு குளிக்க வேண்டும். எலுமிச்சைப்பழம் கலந்து குளிப்பதால் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும்.

3. சந்தன பொடி+ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் அக்குளில் தடவி வர வேண்டும். இப்படி செய்வதால் வியர்வை மணம் நீங்கி சந்தனத்தின் மணம் கமகமக்கும்.

வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் 5 முக்கிய பொருட்கள்- பலன் நிச்சயம் | How To Get Rid Of Armpit Body Odour Home Remedies

4. வெளியில் செல்லாத நேரங்களில் கிழங்கு மஞ்சளை உரசி, அதனை அக்குளில் தடவி வைத்து விட்டு குளிக்கலாம். மஞ்சளில் இருக்கும் பதார்த்தங்கள் வியர்வை சுரப்பியில் பாக்டீரியாக்களை அழிக்கும்.

5. தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் குழைத்து அக்குளில் தடவி விட்டு குளிக்கும் பொழுது பாசிப்பருப்பு மா பூசிக் குளிக்கவும். இப்படி செய்தால் வியர்வை மணம் நிரந்தரமாக செல்லும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை சரி செய்ய வேண்டும்.

வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் 5 முக்கிய பொருட்கள்- பலன் நிச்சயம் | How To Get Rid Of Armpit Body Odour Home Remedies

6. அக்குளில் வாடை இருப்பவர்கள் கற்றாழையை எடுத்து அந்த பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வரலாம். இப்படி செய்வதால் அக்குளில் இருக்கும் வாடை நீங்குவதோடு கருமை மறையவும் வாய்ப்பு இருக்கின்றது.

7. பழுத்த தக்காளிகளை எடுத்து பேஸ்ட் செய்து குளிப்பதற்கு முன்னர் அக்குளில் தடவி விட்டு அரைமணி நேரத்திற்கு பின்னர் குளிக்கவும். இப்படி செய்வதால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.