இறந்தது போன்று கனவு வந்தால் நல்லதா? கெட்டதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தூக்கம் என்பது மனிதரின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். தூக்கத்தின் போது கனவுகள் வருவது இயல்பான ஒன்றே.
ஆனால் கனவில் வரும் சம்பவங்கள் சில தருணங்களில் மகிழ்ச்சியை கொடுத்தாலும், சில தருணங்களில் பயத்தை அளிக்கின்றது.
அதிலும் நாம் மரணிப்பது போன்ற கனவு கண்டால் பயம் இன்னும் அதிகரிக்கவே செய்கின்றது. இதற்கு ஜோதிட பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆனால் கனவில் மரணம் காண்பது, அல்லது தெரியாத நபரின் மரணத்தை கனவில் பார்ப்பது நல்லது என்று ஜோதிடர் கூறுகிறார்.
ஆம் கனவில் நீங்கள் இறப்பதாக நினைக்கும் மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர் என்றால், அவருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அதுவே இறந்தவர் ஒருவரை மீண்டும் நீங்கள் கனவில் கண்டால் அது நல்லதல்ல என்றும் பிரச்சனைகளை முன்னறிவிக்கும் அறிகுறி ஆகும்.
அதே போன்று கனவில் ஒருவர் இறப்பது போன்று கனவு கண்டால், நீண்ட காலம் நீங்கள் வாழப்போகின்றீர்கள் என்று அர்த்தம்.
அந்த கனவு வந்த காலக்கட்டத்தில் நீங்கள் பிரச்சினையில் இருந்தால் அனைத்து பிரச்சினையிலிருந்தும் விடுபட போகின்றீர்கள் என்று அர்த்தம்.
கனவில் ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டது போன்று வந்தால், உங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது, குறித்த நபரின் உடல்நிலை விரைவில் மேம்படும்.
நீங்கள் உங்களது இறந்த தந்தையை உங்கள் கனவில் காண்பது நல்ல அறிகுறியாகும். அவர்கள் உங்களிடம் பேசுவதோ அல்லது பார்ப்பது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துமாம்.