இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ மற்றும் ’சைவம்’ ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜூன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
அருண்விஜய் நடிப்பில் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படத்தை இயக்கவிருந்த இயக்குனர் விவேக், அந்த படம் தாமதம் ஆவதால் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் சாரா அர்ஜுன் முக்கிய வேடத்திலும், இன்னொரு முக்கிய வேடத்தில் பிரியாமணியும் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தில் சாரா அர்ஜூன் கல்லூரி மாணவியாக நடிக்கவிருப்பதாகவும், ஒரு பழிவாங்கும் படலத்தை அவர் கல்லூரி மாணவியாக இருந்து கொண்டே நிறைவேற்றும் கேரக்டர் என்றும் இந்த கேரக்டருக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்ததாகவும் இயக்குனர் விக்ரம் தெரிவித்துள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்தபின் ஜனவரியில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் விவேக் கூறியுள்ளார். சென்னை உள்பட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது