வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தை தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இதில் 44 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.