பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் குழந்தைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்கள் கை குழந்தையாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை.ஆனால், அவர்கள் வளரும் போது தான் உண்மையான பிரச்சனையே ஆரம்பிக்கும்.

குழந்கைகள் பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களுக்கு கோபம், ஆனந்தம், பிடிவாதம் போன்ற பல உணர்ச்சிகள் ஒட்டிக்கொள்ளும்.

அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்பது? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | When Your Child Is Stubborn How To Handle

 

தனக்கு ஒரு பொருளோ அல்லது விஷயமோ வேண்டுமென்றால் அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதற்காக அழுது புரளுவது, விழுந்து புரண்டு அழுவது போன்ற விஷயங்களை செய்வது குழந்தைகளின் இயல்பான விடயம் தான்.

பெற்றொர்கள், சில சமயங்களில் அவர்கள் அழக்கூடாது என்பதற்காக குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுத்து பழக்கிவிடுகின்றனர்.ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது சாத்தியமாகாது.

அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்பது? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | When Your Child Is Stubborn How To Handle

இப்படி பிடிவாத குணம் கொண்ட குழந்தைகளை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் சேர்ந்து குறும்பு தனமும் வளரும். அவர்களிடம் அதிகமாக பேசுவதே வீண். அவர்கள் எதையாவது கேட்டு அடம் பிடிக்கும் போது அமைதியாக இருங்கள். அதுவே அவர்களின் பிடிவாதத்தை குறைக்கும் முதல் வழி.

அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்பது? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | When Your Child Is Stubborn How To Handle

 

அது ஏன் அவர்களுக்கு வேண்டாம், அது வாங்கி கொடுத்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தால் நீங்கள் பொறுமை இழந்து விடுவீர்கள்.எனவே, பிடிவாதம் பிடிக்கும் குழந்தையிடம் அமைதியை கடைப்பிடியுங்கள்.

அவர்களிடம் மீண்டும் மீண்டும் பேசுவதால் மேலும் பிடிவாதமாக மாறுவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் எது கேட்கிறார்களோ அதை வாங்கி கொடுப்பதை விட்டு விட்டு, அவர்களுக்கு எது தேவை என நீங்கள் நினைக்கிறிரீர்களோ, அதை மட்டும் வாங்கி கொடுங்கள்.

இதனால் அவர்களே புரிந்து கொள்ளும் போக்கை வளர்த்து கொண்டு நாளடைவில் பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அந்த குணத்தை தானாகவே விட்டுவிடுவார்கள்.