சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை படக்குழு ஆரம்பித்துள்ளது.

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வந்தார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.32 மணியளவில் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை சிம்புவின் ரசிகர்கள்  இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.