பெண்கள் அணியும் நகைகளில் வெள்ளி நகைகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் கருகருவென இருக்கும் வெள்ளி நகைகளை மிகவும் சுலபமாக எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - தேவையான அளவு
டீ தூள் - 1 ஸ்பூன்
ஷாம்பு பாக்கெட் -1
செய்முறை
பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கொலுசு மூழ்கும் அளவிற்கு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பின்பு அதனுள் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். இதில் தேயிலையின் சாறு இறங்கும் வரை கொதித்த பின்பு அதனுள் ஷாம்பு போட்டு கொதிக்க விட்டு பின்பு கொலுசை போடவும்.
ஒரு 5 நிமிடம் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்பு சுடு ஆறிய பின்பு கொலுசை வெளியில் எடுத்து பல்துலக்கும் பிரஷ் ஒன்றினை வைத்து மிகவும் லேசாக தேய்க்கவும்.
ஓரளவிற்கு அழுக்குகள் சென்றுவிடும். பின்பு கொலுசு மீது சிறிது ஷாம்பு சேர்த்து, மீண்டும் பிரஷ் வைத்து தேய்த்தால் கொலுசு நிச்சயமாக புதிதாக மாறிவிடும்.