நான் படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால், அவருக்கு என்னைப் படத்தில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை என்று மட்டும் என்னிடம் கூறப்பட்டது என்று கூறியுள்ளார்.
திரையுலகில் தான் எதிர்கொண்ட சில மோசமான அனுபவங்கள் குறித்து பேசியுள்ள நடிகை டாப்ஸி பண்ணு, திரையில் அளவுக்கு அதிகமாகக் கவர்ச்சியாகக் (hypersexualised) காட்டப்பட்டது முதல், தெளிவான காரணம் எதுவுமின்றி படத்திலிருந்து நீக்கப்பட்டது வரை பல விஷயங்களைப் பற்றி அவர் விவரித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
நயன்தீப் ரக்ஷித்துடனான சமீபத்திய உரையாடலில், பேசிய அவர் ஆரம்பகாலத்தில் அனுபவமின்மை காரணமாகச் சில விஷயங்களை வேலையின் ஒரு பகுதி என ஏற்றுக்கொண்டதாகவும், பின்னரே அதன் பாதிப்புகளைப் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ள அவர், ஒரு கதநாயகனின் மனைவிக்குத் தன்னைப் பிடிக்காததால் ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இது குறித்து பேசிய அவர், எனது படப்பிடிப்புக்கான தேதிகளைக் கொடுத்த பிறகும், ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டேன். அந்த முடிவுக்குத் என்னிடம் ஒரு உறுதியான காரணம் கூடக் கூறப்படவில்லை , திரைக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்கு வியப்பாக இருந்தது. அந்தப் படத்தின் கதாநாயகன் தான் என்னை மாற்றிவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. அதற்கான காரணம் கடவுளுக்குத்தான் தெரியும்.
நானே பல காரணங்களை யோசித்துப் பார்க்கிறேன். அவருக்குள் இருந்த பாதுகாப்பற்ற உணர்வாக இருக்கலாம், அல்லது தனக்கு நெருக்கமான வேறு யாரையாவது அதில் நடிக்க வைக்க அவர் விரும்பியிருக்கலாம். எனினும், எனக்கு எந்தவொரு உறுதியான காரணமும் சொல்லப்படவில்லை. நான் படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால், அவருக்கு என்னைப் படத்தில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை என்று மட்டும் என்னிடம் கூறப்பட்டது என்று கூறியுள்ளார்.
ஒரு படத்திலிருந்து டாப்ஸி நீக்கப்பட்டது குறித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. 2021-இல் சித்தார்த் கண்ணனுடனான உரையாடலில், ஒரு படத்திற்குத் தேர்வாகிப் பின்னர் நீக்கப்பட்டதையும், அந்த முடிவை ஊடகங்கள் மூலமாகவே தான் அறிந்துகொண்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
"நான் சும்மா நீக்கப்பட்டேன். ஊடகங்கள் வாயிலாகவே அதைத் தெரிந்துகொண்டேன். நான் இதுபற்றிப் பகிரங்கமாகப் பேசிய பிறகே, மன்னிப்பு கேட்பதற்காக அவர்கள் என்னை அழைத்தார்கள். இருந்தபோதிலும், அந்த முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை வெளிப்படுத்த அவர்கள் தயங்கினார்கள் என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் 'பதி பட்னி அவ்ர் வோ' (Pati Patni Aur Woh) திரைப்படம் தொடர்பானது எனக் தெரிகிறது. அதில் கார்த்திக் ஆர்யன், பூமி பெட்னேகர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். அந்தச் சமயத்தில், தான் படத்திலிருந்து நீக்கப்பட்ட விதத்தை டாப்ஸி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில், அந்தப் பாத்திரத்திற்குப் பரிசீலிக்கப்பட்ட பல நடிகைகளில் டாப்ஸியும் ஒருவர் என்றும், அவருக்கு எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
மற்றொரு படத்திலிருந்து நீக்கப்பட்டதற்குக் கூறப்பட்ட காரணங்களில் ஒன்றையும் டாப்ஸி பகிர்ந்துகொண்டார். தான் கேட்டதிலேயே மிகவும் மோசமான விளக்கம் என்று அதைக் குறிப்பிட்ட அவர், அது கதாநாயகனின் மனைவியோடு தொடர்புடையது என்றார். நான் நீக்கப்பட்டபோது எனக்குச் சொல்லப்பட்ட மிகவும் மோசமான காரணம்: 'ஹீரோவின் மனைவிக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னார்கள். அவருக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
தனது ஆரம்பக்காலத்தில், ஒரு காட்சி எந்த அளவுக்குக் கவர்ச்சியாகப் படமாக்கப்படுகிறது அல்லது திரையில் அது எப்படி வெளிவரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அனுபவமோ அறிவோ தன்னிடம் இருக்கவில்லை என்று டாப்ஸி கூறினார். படப்பிடிப்புத் தளத்தில் தான் எதிர்பார்த்ததற்கும், திரையில் வந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை முழுப் படத்தையும் பார்த்த பிறகே உணர முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
அது அளவுக்கு அதிகமான கவர்ச்சி என்பது எனக்குத் தெரியாது. முழுப் படத்தையும் பார்க்கும்போதுதான் அதை உணர முடியும். படப்பிடிப்பின் போது, அது அந்தத் திசையில் செல்கிறது என்பதை உணர முடியாது. அது மிகவும் அழகியல் சார்ந்ததாக (aesthetic) இருக்கும், இந்த அளவுக்குக் கவர்ச்சியில் கவனம் செலுத்தப்படாது என்றே நினைத்தேன். ஆனால் அதைப் பார்த்தபோது, அது தேவையில்லாத ஒன்றாக எனக்குத் தோன்றியது.
சினிமா துறைக்குப் புதியவர் என்பதால், படப்பிடிப்புத் தளத்தில் எது சாதாரணமானது என்பதைப் புரிந்துகொள்ளத் தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களையே தான் பெரிதும் நம்பியிருந்ததாக அவர் கூறினார். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் 'இது சாதாரண விஷயம் தான், எல்லோரும் செய்கிறார்கள்' என்று சொல்லும்போது, நாம் வேறு பின்னணியில் இருந்து வந்ததால் நமக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கத் தோன்றும்.
எனக்கு நடிப்பு பற்றியோ அல்லது படம் தயாரிப்பது பற்றியோ எதுவும் தெரியாது, அதனால் இது வேலையின் ஒரு பகுதி என்று நினைத்தேன். பின்னர்தான் இது தேவையில்லை என்பதை உணர்ந்தேன். அளவுக்கு அதிகமான கவர்ச்சியைக் காட்டாமலேயே ஒரு படத்தில் உங்களால் கவர்ச்சியாக இருக்க முடியும்."
திரையுலகில் பெண் நடிகர்கள் மற்றும் அவர்களின் உடல்கள் பற்றிப் பேசப்படும் மற்றும் காட்டப்படும் விதம் குறித்து தாப்ஸி இதற்கு முன்பும் பேசியுள்ளார். சுபங்கர் மிஸ்ராவுடனான முந்தைய உரையாடலில், பாடல் காட்சிகளில், குறிப்பாகத் தென்னிந்திய சினிமாவில், பெண் உடலின் மீது செலுத்தப்படும் கவனம் குறித்து விவாதித்தார்.
நானும் இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஹிந்தி சினிமாவில் உள்ள ஐட்டம் பாடல்களில் இதன் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதல்ல, ஆனால் தென்னிந்திய சினிமா அளவுக்கு அங்கு இல்லை. ஹிந்தி சினிமா மார்பிளவுகள் (cleavage) மீதே அதிக கவனம் செலுத்துகிறது," என்று அவர் கூறியிருந்தார்.
படப்பிடிப்பின் போது நடிகைகளை பேடட் பிரா (padded bras) அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது பற்றியும், அதுபோன்ற கோரிக்கைகள் குறித்த உரையாடல்கள் படப்பிடிப்புத் தளத்தில் எவ்வளவு சங்கடமானதாக மாறும் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். தனது தெலுங்கு அறிமுகப் படமான 'ஜும்மாண்டி நாதம்' படத்தை இயக்கிய கே. ராகவேந்திர ராவ் சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்றையும் டாப்ஸி கூறியுள்ளார்.
இந்த படத்தில் ஒரு உணர்ச்சிமிக்க (sensual) காட்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, தனது இடுப்புப் பகுதியில் தேங்காய் வீசப்பட்டது. "என் இடுப்பில் தேங்காய் மோதுவதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
