நடிகை சினேகா தனது கனவாரன நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் காதல் கலந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சினேகா, அதில் அவருக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் இணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை சினேகா
தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது.
இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அது மாத்திரமன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவரைாகவும் பங்கேற்று வருகின்றார்.

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை சினேகாவுக்கு இப்போது 44 வயது ஆகிறது. ஆனால் இப்போதும் அவர் பார்ப்பதற்கு குறையாத இளமையுடன் ரொம்பவே ஃபிட்டாக காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் தனது கனவாரன நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் காதல் கலந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.

பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சினேகா, அதில் அவருக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் இணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துகள் டாடா, என் காதல், என் சிறந்த நண்பர், என் வாழ்நாள் தலைவலி,அதாவது என் கணவர் என நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ள சினேகா, தங்களது வாழ்க்கை அன்பு, சிரிப்பு, சண்டை, வாக்குவாதம் மற்றும் பல நினைவுகளால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
