லக்ஷ்மி மேனன்

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை லக்ஷ்மி மேனன். சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்து ஒரே ஆண்டில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் லக்ஷ்மி மேனன்.

அதன்பின் குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

லக்ஷ்மி மேனனா இது!! உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Actress Lakshmi Menon Appearance Video Viral

 

பின் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த லக்ஷமி மேனன், 2021ல் வெளியான புலிக்குத்தி பாண்டியன், சந்திரமுகி 2, சப்தம் போன்ற படங்களில் நடித்தார். இதனையடுத்து பார் தகராறில் அவர் மீது வழக்கு போடப்பட்ட நிலையில், அதன்பின் ஆளே காணாமல் போனார்.

தற்போது, உடல் எடை அதிகரித்து முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவரின் சமீபத்தில் வீடியோவை பார்த்து பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.