அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய ஜனாதிபதி ஜோ பிடன் ஏற்படுத்த உள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி (43) ஒபாமா காலத்தில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்ற பதவியை வகித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.