பொதுவாக கனவுகள் என்பது அனைவருக்கும் தூங்கும்போது வரக்கூடியது.

இது நாம் நிஜத்தில் காணும் விஷயங்கள் மற்றும் அதனுடன் கூடிய கற்பனையை விடயங்களை பிரதிபலிக்கின்றது. கனவில் நாம் கண்ட விஷயங்கள் தூங்கி எழுந்து சிறிது நேரத்தில் மறந்து விடும்.

இப்படியான கனவு சில நேரங்களில் நாம் வாழ்க்கையில் நடக்க போகும் விடயங்களை முன்கூட்டியே வலியுறுத்துவதற்காக வருகின்றது என பலரும் நம்புகிறார்கள்.

கனவு சாஸ்திரங்களின்படி, எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்கள், நிகழ்வுகள் கூட கனவுகள் மூலம் பிரதிபலிப்பாக்கும் என கூறப்படுகின்றது.

கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா? - மழை, நிலா வந்தால் என்ன பலன் தெரியுமா? | Things That Come In Good Dreams In Tamil

அந்த வகையில், கனவில் என்னென்ன விடயங்கள் வந்தால் எப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. பொதுவாக இந்து மதத்தில் கடவுளாக மாடு இருப்பதால் இது கனவில் வந்தால் புண்ணியமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் மகிழ்ச்சியான செய்திகள் வரும். உதாரணமா, குழந்தை பிறந்ததற்கான அறிகுறியாக இருக்கிறது.

2. கனவில் ஏதாவது தெய்வம் வந்தால், கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை ஆரம்பிக்கும் என்று அர்த்தம். அத்துடன் விரைவில் நல்லச் செய்தி வர போகிறது என்பதனை உணர்த்துகின்றது.

கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா? - மழை, நிலா வந்தால் என்ன பலன் தெரியுமா? | Things That Come In Good Dreams In Tamil

3. குதிரை சவாரி செய்வது போல் கனவு வந்தால் ஒரு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

4. கனவில் இருள், மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவது போல் வந்தால் மங்களம் உண்டாகும். முதலீடுகளால் பண பலன்களும், திடீர் நிதி ஆதாயம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கனவில் மழையைக் கண்டால் வாழ்வில் அழகான துணை கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா? - மழை, நிலா வந்தால் என்ன பலன் தெரியுமா? | Things That Come In Good Dreams In Tamil

5. குளிர்ச்சியுடன் நிலா வந்தால் மிகவும் நல்லது. அமைதியின் சின்னமாக இருக்கும் நிலா வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகளை நினைவுப்படுத்துகின்றது. அத்துடன் சமூகத்தில் கௌரவம், அந்தஸ்தும் உயரும்.