​ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் ஆளுமை, எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் தனித்துவமான குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பிறப்பில் எவ்வளவு கோபகாரர்களாக இருந்தாலும் திருமணத்தின் பின்னர் அப்படியே எதிர்மறையாக மாறிவிடுவார்களாம்.

மனைவியிடம் பெட்டி பாம்பாய் அடங்கிவிடும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Husbands Obey Their Wife

அப்படி திருமணத்தின் பின்னர் மனைவியின் விருப்பங்களுக்கு கட்டுபட்டு, மனைவியிடம் எல்லா விடயங்களிலும் அடங்கிப்போகும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சிம்மம்

மனைவியிடம் பெட்டி பாம்பாய் அடங்கிவிடும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Husbands Obey Their Wife

சிம்ம ராசியில் பிறப்பெடுத்த ஆண்கள் சூரியனை அதிபதியாக கொண்டவர்கள் என்பதால், இயல்பாகவே தலைமை வகிக்கும் ஆற்றல் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

திருமணத்துக்கு முன்னர் வரையில் யாருக்கும் கட்டுப்படாதவர்களாக சுற்றி திரிந்து வந்த இவர்கள் திருமணம் முடிந்தவுடன் மனைவியின் சொல்லை அப்படியே கேட்டு நடப்பவர்களாக மாறிவிடுவார்களாம். 

காதல் விடயத்தில் அதிக ஈடுப்பாடு கொண்ட சிம்ம ராசியினர் மனைவியின் ஆசையை  நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் மனைவிக்காக அதிக நேரம் செலவிடுவதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். 

மீனம்

மனைவியிடம் பெட்டி பாம்பாய் அடங்கிவிடும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Husbands Obey Their Wife

மீன ராசி ஆண்கள் இயல்பாகவே அதிக கற்பனை திறன் நிறைந்தவர்களாகவும் நிஜ வாழ்க்கையை விடவும் கனவு உலகில் அதிகம் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இயல்பாகவே மற்றவரின் கருத்துக்களுக்கு அதிகம் மதிப்பளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

அதனால் தன் மனைவியின் கருத்துக்களுக்கு அப்படியே தலையாட்டி சென்றுவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

திருமணமான பிறகு தன் மனைவிக்கு அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுப்பார்கள். இவர்கள் மனைவியிடம் சண்டையிட்டால் தன் நிலையில் இருக்க மாட்டார்கள். 

அதனால் முறன்பாடுகளை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் அதிகமாக மனைவி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். 

கும்பம்

மனைவியிடம் பெட்டி பாம்பாய் அடங்கிவிடும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Husbands Obey Their Wife

கும்ப ராசியில் பிறந்த ஆண்கள் பிறப்பிலேயே அதிக பகுப்பாய்வு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விடயத்தையும் அதிகம் ஆராய்ந்து அறியும் தன்மையில் இருப்பார்கள்.

இவர்கள் திருமண உறவின் மீதும் மனைவியின் மீதும் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பாரை்கள். 

மனைவி வருத்தப்பட்டால், அதை உடனடியாக தீர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் குணம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் மனைவியின் சொல்லை மகிழ்சிசியுடன் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.