தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6வது நாளாக 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,856 என்றும் 87 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வழக்கம்போல் அதிகபட்சமாக இன்று 2,393 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 60 பேர் (அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -16) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 1,201 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம், இன்று 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை மொத்தம் 50,074 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.