யாழ்ப்பாணம் – புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுக்க சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முறாவில், புலோலி தெற்கைச் சேர்ந்த 60 வயதான முருகமூர்த்தி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்து குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்ற அவர் குடிதண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வீதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.