தமிழா தமிழா நிகழ்ச்சியில் Autism பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் Autism பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை அரங்கத்தில் காண முடிகின்றது. அதிலும் ஒரு சிறுவன் தனது மனக்குமுறலை அரங்கத்தில் கொட்டியுள்ளார்.
அப்பா ஒருவர் தனது மகனுக்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றார். அந்த மகனிடம் அப்பாவை எவ்வளவு பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, அவன் கூறியுள்ள பதில் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
