நீயா நானா நிகழ்ச்சியில் தாய்கிழவிகள் மற்றும் பேத்திகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த வாரம் தாய்கிழவிகள் மற்றும் பேத்திகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

ராதிகா நடித்த தாய்கிழவி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில், நீயா நானாவின் தலைப்பு அதையே வைத்துள்ளனர்.

Neeya Naana: அரங்கத்தில் தாய்கிழவிகள் செய்த அட்டகாசம்... கோபிநாத்தின் தரமான செயல்

அதாவது வயதான காலத்தில் தாய்கிழவிகள் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து வாயடைத்துப் போன பேத்திகளின் ரியாக்ஷனை தான் நாம் காண போகின்றோம்.

நகைச்சுவைக்கு இடையே பாட்டிகளில் நெகிழ்ச்சியான கண்கலங்க வைக்கும் தருணமும் அரங்கேறியுள்ளது. தாய் தந்தை இல்லாத பெண் பிள்ளைக்கு பூட்டி ஆச்சி அவரை வளர்த்து தற்போது இளம்பெண்ணாக நிறுத்தியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது..