சமீபகாலமாகவே பிரபல நடிகையான வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்த சர்ச்சைகள் தான் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான வனிதா, மூன்றாவது முறையாக கடந்த மாதம் 27ம் திகதி பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் மனைவி எலிசபெத் புகாரளிக்க பிரச்சனை வெடித்தது.

திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் எலிசபெத்துக்கு ஆதரவாக பேச அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் முதன்முறையாக வனிதா- பீட்டர்பால் தம்பதியினர் இணைந்து பேட்டியளித்து வருகின்றனர்.

அப்போது பேசுகையில், என் மகள் பிறந்து நான்கு வருடங்கள் கழித்தே பார்த்தேன், நள்ளிரவில் என் மகளுக்காக வீட்டு வாசலில் நின்றிருக்கிறேன்.

பணம் மட்டுமே அவளுடைய நோக்கம், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த போது குடித்தேன், தற்கொலை முயற்சி கூட செய்திருக்கிறேன்.

சாகும் நிலையில் இருந்தபோது கூட அவள் என்னை வந்து பார்க்கவில்லை என முதல் மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.