சீரியல் நடிகை ஆல்யா மானசா குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று, ஜாலியாக என்ஜாய் செய்து தற்போது வெளியிட்டுள்ள அழகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா - சஞ்சீவ்
சின்னத்திரையில் ஜோடிகளிலேயே மிகவும் பிரபலமான ஜோடி என்றால் அது ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடியை சொல்லலாம்.

இவர்கள் இருவரும் சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்து பின்பு காதலால் ரியல் ஜோடி ஆனார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.
தொழில் விடயத்திலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கணவர் குடும்பத்தையும் தன் குடும்பம் போல் ஆல்யா பராமரித்து வருகின்றார் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இவலை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று ஆல்யா மானசா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
