வடக்கில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இன்று யாப்பாணத்தில் மாத்திரம் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் தொகுதியில், யாழ்ப்பாணத்தில் 25 பேருக்கும், மன்னாரில் இருவருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் 17 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.